திக்கு திசை

ஏன்டா பட்டணத்துத் தம்பி, உங்கூட வர்ற பையனும் பொண்ணும் உம் இள்ளைங்களா?
@@@@@@
ஆமாம் தாத்தா.
@@@@@@
கொழந்தைங்க ரண்டும் அழகா இருக்குறாங்க தம்பதி. அவுங்க அழகுக்கு ஏத்த மாதிரி அழகான தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கிறயா?
@@@@@
தமிழர்கள் தமிழ்ப் பேருங்கள வைக்கிற காலம் மலையேறிப் போச்சுங்க தாத்தா. உங்க ஊருல தமிழ்ப் பேருள்ள எத்தனை பேரு இருக்குறாங்க?
@@@@@@
நீ சொல்லறது சரிதான் தம்பி. எம் பேரே
'விஜயன்'ங்கிற இந்திப் பேரா இருந்தது. நான் என்னோட மூத்த பையன்கிட்டச் சொல்லி எம் பேரை 'வெற்றிமாறன்'னு சட்டப்பூர்வமாக மாத்திட்டேன். சரி உங் கொழந்தைங்க பேருங்களச் சொல்லு தம்பி.
@@@@@@
பொண்ணுப் பேரு திஷா (Disha = Direction)..
பையன் பேரு 'திக்' (Dig = ditch setllement. Unisex name).
@@@@@@@
என்ன தம்பி இந்திப் பேரு வைக்கிறதிலயும் ஒரு அர்த்தம் வேண்டாமா? 'திக்கு', 'திசை'ன்னெல்லாம் பேரு வைக்கிறதா? நீ 'திக்'குன்னு சொன்னதும் எனக்கு திக்கு திக்குனு அடிச்சுக்குது மனசு.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Dig - Indian, Welsh, German, English, Sanskrit, Spanish origin.
Disha - Indian origin

எழுதியவர் : மலர் (15-Oct-19, 7:49 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 281

சிறந்த நகைச்சுவைகள்

மேலே