கனவின் கனவு

என் அறியாமையை
உன் கனவுகள் தட்டி தட்டி எழுப்புவதால்தான்
உறக்கத்திலும் என்னால்
விழிப்புணர்வுடன் இருக்கமுடிகிறது

நனவுகளை எதிர்நோக்கிய வண்ண்ம்
என் கனவுகள் இருப்பதில்லை.
நனவுகளாக நடந்தவைதானே
கனவுகளாக வருகின்றன!

கனவுகளில் உன்னைத் தேடி.. தேடி,
இறுதியில் என்னுள் உன்னைக் கண்டடைந்து
என்னில் நான் தொலைகிறேன்

சில இரவுகளில்…
கனவுகளில் கூட தூங்கிவிடுகிறேன்
அப்போது வரும் கனவிலும் நீயே வருவதால்
என் கனவின் கனவு நீ.

எழுதியவர் : யேசுராஜ் (19-Oct-19, 12:38 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : kanavin kanavu
பார்வை : 279

மேலே