பிரசவம்

சொல்லமுடியாத வலி
சுகமான சுமை
ஏங்கும் தாய்மனதுக்கு
தத்தளிக்கும் அருகாமைக்கு

சிலருக்கு எளிது
பலருக்கு கடினம்
எப்படியிருப்பினும்
சுகம் காணும் - குழந்தை
முகம் பார்த்து

முள்ளந்தண்டூசி ஒருபக்கம்
அக்குபஞ்சர் மறுபக்கம்
சுவாசத்தொடுப்பு தயாராய்
எப்படித்தான் சொல்ல

மறந்திடுவோம் அக்கணப்பொழுதை
மீட்டிப்பார்க்க மனமின்றி
நின்று நிலைப்பது மனக்கண்முன்
குழந்தையின் முதல் அழுகை மட்டுமே!
..................
யோகராணி கணேசன்
15.05.2012

எழுதியவர் : யோகராணி கணேசன் (21-Oct-19, 9:58 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : pirasavam
பார்வை : 1237

மேலே