நெல்லிக்காயின் குணம் தேரையர்

நெல்லிக்காய் குணங்கள்

பித்த மனலையும் பீநிசம்வாய் நீர்வாந்தி
மந்தமலக் கட்டு மயக்கமுமி லொத்துவரு
வில்லிக்கா யம்மருங்க மென்னாட்கா லந்தேர்ந்தே
நெல்லிக்கா யும்மருந்து ணீ

நெல்லிக் காய்க்குப் பித்தம் நீங்குமதன் புளிப்பாற்
செல்லுமே வாதமதிற் சேர்ந்து வப்பாற்சொல் லுமைய
மோடு மிதைச்சித் தத்தி லுண்ண வன்னுடனே
கூடு பிரமே கமுமப்பால் கூறு மருந்து அமிர்தம்
,(1)
அமிர்தத்தை ஒத்த நெல்லிக்காயை பகலில் உண்ணப் 1. பைத்தியம் 2. மனநோய். 3 பீ நிசம்
4.வாய் நீர்சுரப்புகள் 5.. வாந்தி 6. உள்மாந்தம்.7. மலபந்தம் 8. தலை சுற்றல் ,9. பிரமேகம்
ஆகிய வியாதிகள் போகும். காமன் அழகுண்டாம்
(2)
அதனுடைய புளிக்கும் குணத்தால் வாய்வும் போகும் மற்றும் துவர்ப்பு குணத்தால் கபம்
நீங்கும்.

எழுதியவர் : பழனிராஜன் (21-Oct-19, 12:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 90

மேலே