ஆத்திசூடி வெண்பா 8 – ஏற்பதிகழ்ச்சி

நேரிசை வெண்பா

மாவலிபான் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
வாவென்றான் மாதவற்கஃ தாகுமோ – மூவுலகிற்
பேர்பரவும் புன்னைவனப் பேரரசே யெவ்வகையாற்
சீர்பெறினு மேற்பதிகழ்ச் சி. 8 இராம பாரதி

பொருளுரை:

விரோசனன் மகனாகிய மாவலி என்ற அசுரன் மூவுகங்களுக்கும் அரசனாக வரம்பெற்று அரசு செய்ய்ங் காலத்தில் தம்முலகங்களை இழந்த தேவர்கள் யாவரும் விட்டுணுவையடைந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். விட்டுணுவும் காசிபன் – அதிதி என்னும் இருவர்க்கும் மகனாகப் பிறந்து வாமன ரூபத்தோடு மாவலியிடம் சென்று மூவடி மண் கேட்டார். மாவலியும் மூவடிக்கு உடன்பட்டு நீர்விட்டுக் கொடுக்கும்போது குருவாகிய சுக்கிராச்சாரியார் வண்டு வடிவம் கொண்டு நீர் விடுங் கரக மூக்கிலிருந்து தடுத்து, விட்டுணுவின் தர்ப்பை நுனியாற் குத்துண்டு கண்ணிழந்தார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 8:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே