உயிர்

தோப்புக்கரண நிலையிலே
தொப்புள் கொடி வழி உணவிலே
தொடர்ந்த வளர்ச்சி நிலையிலே
தொடங்கும் உயிர் பிண்டமோ

உருவானது கருப்பையிலே
உக்கர உந்துதல் காரணத்தால்
உள்ளே நுழைந்த உயிரது
உண்மை நேசத்தால் ஆனதோ

உள்ளக் கிளர்ச்சியை தணிக்கவோ
உண்மையில் வறுமையைப் போக்கவோ
ஊடல் நிலையை முடிக்கவோ
உறவின் பழியைத் தீர்க்கவோ

அன்பால் கிளர்ச்சி அடையலாம்
ஆசையால் அணைத்தல் நிகழலாம்
அத்துமீறியும் நுழைய முயலலாம்
அத்தனைக்கும் பெண்ணின் எண்ணமது

குற்றமில்லை என்று நினைத்தலில்
குறுகி உருகி நின்றாலோ
குதுகலித்து இன்பம் கொண்டாலோ
குலத்தைக் காக்கும் சூல் ஆகிடுமே.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Oct-19, 9:54 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : uyir
பார்வை : 679

மேலே