கேள்வி தொடுக்கும் மரம்

இயற்கையான என்னை
அழித்து /
செயற்கைகளை வளர்க்கும்
மனிதன்/
உதிரும் இலைகளோடு
வேரையும் /
மறைத்துக்
கற்கள் பரப்புகின்றான்/
தானே தனக்கு
வினையாகின்றான்/
மரங்களை அழித்த பின்னே/
மழை கேட்டு வருந்துகின்றான்/

மருத்துவச்
செடிகளையும் எரிக்கின்றான் /
பின் நோய் தீர்க்க மருத்துவம்
தேடுகின்றான்/
அதற்காகப் பெரும் தொகைப்
பணம் இழக்கின்றான்/
நாட்டு வைத்தியத்தின் நன்மை அறியாதவன் /
கூட்டு அறிவின் வைத்தியத்துக்கு
அலைகின்றான் /

மழைக்குக் குடையாக /
மழலைக்குத் தொட்டிலாக/
வெயிலுக்கு நிழலாக/
கோலாட்டத்திற்குக் குச்சியாக/
தாலாட்டக் கட்டிலாக/
கூடி வாழும் குடிசைக்குக்
கூரைகளாக/
கூன் விழுந்ததுமே ஊண்டு
பொல்லாக/

உயிர் திறந்து விட்டால்
உமது உடலுக்குப் பாடையாக/
உன்னுடனே உறவாடி /
உன் இறுதிப் பாதை வரை
வரும் எங்களை /

ஒரு நொடி நினைத்துப் பார்த்து/
இரக்கத்தைக் கொடுத்திட /
அறுப்பதை நிறுத்திட /
அழிப்பதைப் போக்கிட/
மனிதம் இல்லாமல் போனதே /
ஏனடா ? மனிதா உமக்கு /

தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (23-Oct-19, 2:40 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 154

மேலே