வர்ணம்

வர்ணமில்லா வானம்- அது
இருள் சூழ்ந்த மனம்
இருள் கொண்ட வானம்- அது
எழிலில்லா மனம்

அகத்தின் அழகு- அது
வர்ணத்தின் எழில்
ஒளிரும் விளக்கு- அது
புடைசூழ்ந்த வர்ணம்

பகைவனின் மூர்க்கமும்
மண்டியிடும் வர்ணமதில்
குழந்தையின் அழுகையும்
குழைந்து நிற்கும் பல வர்ணத்தில்

ஏழ்மையின் எழிலும்
உயர்ந்து நிற்கும் வர்ணத்தில்
வர்ணமில்லா இல்லம்- அது
பொருளில்லா பெட்டகம்-ஆம்
வர்ணம்-அது
வானம் தந்த அட்சயம்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (24-Oct-19, 1:14 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : varnam
பார்வை : 492

மேலே