காலமெல்லாம் காத்திருக்கேன்

காலங்கள் உருளுதே கண்ணே-உனைக்
காண கண்கள் ஏங்குதே!
மலர்களெல்லாம் பார்க்கையிலே-உன்
மலர்முகத்தைக் கண் தேடுதே!
பெண்ணே நீ வருவாயோ?-உனைக்
காண தரிசனம் தருவாயோ?
கனவே உனைக் காணவே-தேடி
கதிர் சோலை வந்தேனே!
மானே உனை எண்ணும்போதே-என்
மனம் மகிழ்ச்சியில் துள்ளுதே!
காலம் பல கடந்து வந்தேன்-இந்த
கண நேரம் பொறுக்கலையே!
கண்மணியே வந்துவிடு-நான்
காலமெல்லாம் காத்திருக்கேன்!