எனக்கானவள்
தூவானத் தூரல் காற்றோடு
சேர்ந்த சாரல்
குடையோடு இடைசொருகி
மெல்ல நடைபோட்டு
நாணலாய் என்னவள் மெல்ல
நடந்தாள்
நனைந்து விடக் கூடாதென
நடுக்கத்தில்
அவளை தொட்டுவிடும் துடிப்பிலே
விடாது
துரத்தும் தூரலே அடாது ஏதும் செய்யாதே
என்னைக் காணவே வருகிறாள்
எனக்கானவள்
அவள் வந்து சேரட்டும் என்னிடம்