நட்பிற்கு ஏது இறுதியாண்டு...?

"நட்பிற்கு ஏது இறுதிநாள்......"

இது நமக்கு இறுதி ஆண்டு
இதயத்தின் ஆழத்தில்
உறைந்துவிட்ட இந்த நட்பு
நள்ளிரவு உறக்கத்திலும்
நகைத்து நிற்கும்...

உன்னுடைய நட்புதனில்
கைகலப்போ கடுஞ்சினமோ
கடுகலகும் இருந்ததில்லை,
கலகலப்பு மட்டுமே "பிரம்மாஷ்த்திரம்..."

சில தினங்கள் கடந்து சென்றால்
வாழ்வைத் தேசி அவரவர் பாதையில்
பார்வைகள் செல்லும்

திசைகள் வெவ்வேறாய்
பயணம் செய்வீர்...

கிழக்கும் மேற்கும்
சேர்ந்திடுமோ நாளையேனும்...?
ஏக்கத்திலே வாழ்வு கடக்கும்...

எங்கேனும் நீங்கள்
சந்தித்துக்கொள்ள நேரிட்டால்
தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்
பழைய நினைவுகளை...

மனம் புகுநதால் தணலில்
விழுந்த புழுவாய் போவீர்.......

உலா வந்த உமது நட்பு
விலா முறிந்து முடங்கிவிடும்.....

விதியென்று சொல்லமாட்டேன்
காலத்தின் கட்டாயம்....

ஆண்டிற்குமட்டுமே இன்று இறுதிநாள்,
"நம் நட்பிற்கு இல்லை என்றும் இறுதி நாள்...."

எழுதியவர் : Sureka (1-Aug-10, 7:07 am)
பார்வை : 1294

மேலே