சிந்தகி -- உரைநடைக் கவிதை

தொண்ணூறு வயது எள்ளுப் பாட்டிக்கு
எள்ளுப் பேத்தி நான்.
எனக்கு அவர் சூட்டிய பெயரோ
'ஜிந்தகி'
அப்பேரை அவரோ 'சிந்தகி' என்றே விளிப்பார்.

கிராமத்துப் பாட்டி பிறமொழிப் பெயர்களை
உச்சரிக்க முடியாமல் தடுமாறிப் போவார்.
அவருக்கு அவர் பெற்றோர் சூட்டினராம்
உலகறிந்த 'ஜானகி' என்ற பெயரை.

'ஜானகி'யை அவரும் 'சானகி' என்றே உச்சரிப்பார்.
அந்தக் காலத்திலேயே தமிழர்கள் விரும்பதியது
பிறமொழிப் பெயர்களை மட்டுமே என்று
அடிக்கடி சொல்வார் எனதருமை எள்ளுப்பாட்டி.

எள்ளுப் பாட்டி விரும்புவதோ
இந்திப் படங்களையும் இந்தி தொலைக்காட்சி தொடர்களை மட்டுமே.

தன் பெயரே இந்திப பெயர் என்பதால்
தான பெற்ற பிள்ளைகளுக்கும்
பேரக்குழந்தைகள் கொள்ளுப் பேரக் குழந்தைகளுக்கும் அவரே இந்திப் பெயர்களையே சூட்டி
'பெயர் ஞானி' என்ற பட்டத்தையும் பெற்றார்.

முதல் எள்ளுப் பேத்தி எனக்கும்
'ஜிந்தகி' என்று பெயர் சூட்டிய
'சிந்தனைப் பாட்டி என் எள்ளுப் பாட்டி.

"ஏன் அந்தப் பெயரை எனக்குச் சூட்டினீர்"
என்று நான் கேட்டதற்கு
"நீ பிறந்தநாள் புதன்கிழமை பத்து மணி.
நான் பார்த்துக் கொண்டிருந்த
தொலைக்காட்சி படமொன்றில்
நான் கேட்ட பாடல் 'சிந்தகி ஏக்கு சப்பரு'

'சிந்தகி' சந்தமுள்ள பேரென்பதால் அப்பெயரையே உனக்குச் சூட்டினேன்
உணர்ச்சியின் உந்துதால்.
உலகில் யாரும் தான் பெற்ற பிளைஇக்கு
இந்திப் பெயர் 'சிந்தகி'" என்று பெயரைச் சூட்டியதே இல்லை என்று
பெருமிதம் கொண்டார் எனதருமை
எள்ளுப் பாட்டி ஜானகி அம்மாள்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Zindagi = life

எழுதியவர் : மலர் (25-Oct-19, 4:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 74

மேலே