குறும்பு

சிரித்து மகிழவைக்கும்
சிந்தித்து வாழவைக்கும்!

சொல்லால் அடிக்கும்
செயலால் குத்தும்!

குறும்பு குறும்பு
அதுதான் குறும்பு

குட்டிக்குழந்தையும்-தன்னை
மறந்து செய்யும் குறும்பு!

கெட்டிக்காரப் பிள்ளை
சுட்டித்தனமாய் செய்வதும் குறும்பு!

நண்பர்கள் நாலு பேர்
நகைச்சுவைக்காய்ச் செய்வதும் குறும்பு!

முதியோர் பலர்- முற்போக்காய்
முயன்று தோற்பதும் குறும்பு!

நெருட வைத்திடும் நெஞ்சத்தில் அடக்கமாய் கொடுத்திடும் அகமகிழ்வை!

குறும்பு குறும்பு
அதுதான் குறும்பு!

எழுதியவர் : யோகராணி கணேசன் (25-Oct-19, 5:36 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : kurumbu
பார்வை : 1453

மேலே