கண்ணீர் பூக்கள்🍀

(பொதுவாக)
தன்னை உடைத்து
பூக்கிறது கண்ணீர்...
கண்ணீர் உரிந்தால்
இளகிப்போகிறோம்...
மெளன வாய்க்குள்
சுருங்கி போகிறோம்
இரவுத் தோல்
மாட்டிக் கொள்கிறோம்
புன்னகையை
குறுடாக்குகிறோம்
மூச்சுக்குள் வெப்பம்
பெய்கிறோம்..
உறவுகளுக்கு உப்பு
கேட்கிறோம்..
வலிகளை வெறுப்புக்குள்
ஏளம் போடுகிறோம்
நரக கரு உயிரில்
சுமக்கிறோம்...
(இஷான்)

எழுதியவர் : இஷான் (26-Oct-19, 11:33 am)
பார்வை : 121

மேலே