அந்த இருவரும்

ஒருவன் எருமை மாடு
என்று சொல்ல
அடுத்தவன் அதையே
இவனை பார்த்து சொல்ல
ஒரே வகுப்பில் படிக்கும்
இரு மாணவர்களுக்கிடையே
அடிபிடி சண்டை,
வகுப்பில் கூக்குரல்
வேதனையோடு
ஏனைய மாணவர்கள்

ஆசிரியர் கடுங்கோபத்தில்
அடக்கும் விதமாக
இருவரையும் பார்த்து
“ டேய் பசங்களா,
இங்கு நான் ஒருவன்
இருக்கிறேன் என்பதையே
மறந்து விட்டீர்களா?” என
அதட்டினார்,
அமைதியானார்கள்
அந்த இருவரும்.

எழுதியவர் : கோ. கணபதி. (27-Oct-19, 9:36 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : antha iruvarum
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே