திருவிழாக்களை மதிப்போம்

நித்திரையில் இருக்கும் புத்திரர்களே!
சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டும் பேரினத்தில் பிறந்த பெருமையைத் தேடுங்கள்.....

வந்தேறிக் கூட்டங்கள் வாய்மொழிந்த பகட்டை கைவிடுங்கள் மந்தைகளே! விசப்பூச்சிகளை விரட்ட ஒளியைப் பரப்புங்கள் சிந்தையிலே.....

பத்திரமாய் நமக்களித்த பண்டிகை தான் இருக்கு.....
பல்லுயிர்க்கும் உணவளிக்கும் கொண்டாட்டங்கள் நமக்கு.....

சத்தமின்றி பகலவனை மதிக்கும் திருவிழா.....
அதை விடுத்து வந்தேறிகள் பாதையில் செல்வதா.....

எத்தனையோ திருவிழாக்கள் இந்த நாட்டில் இருக்கு.....
எல்லாத்துக்கும் முதலா நம் பொங்கல் தான் இருக்கு.....

மதிகெட்ட தமிழருக்கு சரக்கு ஒன்று இருக்கு.....
மானமுள்ள இனத்திற்கு பெருந்திருவிழாக்கள் செருக்கு.....

விளம்பரங்கள், போலிகளை மிதிப்போம்....!!
நம் திருவிழாக்களைச் சிறப்பாக மதிப்போம்.....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (27-Oct-19, 9:38 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 1715

மேலே