மகிழ்ச்சி தரும் மத்தாப்புகள்

முத்துமுத்தாய்ச் சிதறுது
மத்தாப்புப் பொரிகள்.....
மனசெல்லாம் பெருகுது
மகிழ்ச்சி அலைகள்.....!

கொத்துக்கொத்தாய் விழுது
பொங்குப்பானைத் தூரல்கள்.....
நெஞ்சமெல்லாம் நிறையுது
சந்தோசச் சாரல்கள்.....!

வட்டவட்டமாய்ச் சுத்துது
தரைச்சக்கரப் பின்னல்கள்.....
எண்ணமெல்லாம் வளருது
இளமைக் காலங்கள்.....!

உயரஉயரப் பொழியுது
வானவெடிச் சிதறல்கள்.....
உள்ளமெல்லாம் சிரிக்குது
வண்ணவண்ணக் கோலங்கள்.....!

படபடன்னு வெடிக்குது
பட்டாசு ஓசைகள்.....
இதயமெல்லாம் கேக்குது
இதமான ராகங்கள்.....!

கலகலன்னு கேக்குது
இளஞ்சிட்டுக்களின் சிரிப்புகள்.....
இல்லமெல்லாம் இசைக்குது
இளையராஜாவின் பாட்டுக்கள்.....!

அணிஅணியாய் ஒளிருது
தீபங்களின் வெளிச்சங்கள்.....
அள்ளிக்கொள்ள வருது
தீபாவளிப் பெருமகிழ்ச்சிகள்.....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (26-Oct-19, 4:55 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 784

மேலே