கவிஞர் நெறி
கட்டுகளை தகர்ப்பவனாய் இரு
காற்றை போல் நிறைந்தவனாய் இரு
கிறுக்கலில் மட்டும் எழுச்சி காட்டாது
கீழ்வானின் கதிரொலியாய் இரு
குன்றி போன சமூக எழிலை
கூவி எழுப்பும் சேவலாய் இரு
கெட்டு போய் நிற்கும் மனிதகுல
கேடுகளை சுட்டெரிக்கும் தனலாய் இரு
கைகளில் பேனா எனும் வாளெந்தும் வீரனாய் இரு, நேர்மைக்கு
கொட்டும் முரசின் ஒலியால் இரு என்றும் நீ
கோட்டையில் வீற்றிருக்கும் கோமானாய் இரு, தேச
கௌரவத்தின் அச்சாரமாய் நீ இரு!