தமிழன் என்று சொல்லடா 💪

தமிழன் என்று சொல்லடா ..💪

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்கொரு
குணமுண்டு.
இப்படி சொல்லும்போதே
ஒவ்வொரு தமிழனுக்கும்,
தமிழச்சிக்கும்
உற்சாகமும், திமிரும்
அவர்களை அறியாமல்
அவர்களுக்குள் புகுந்துவிடுகிறது.
உண்மை தானே.
காரணம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி. நம் தமிழ் குடி.

கன்பூசியஸ் என்ற சிந்தனையாளன் சீனத்தில் தோன்றி தத்துவம் உதிர்ந்தான்.
தத்துவ ஞானி
சாக்ரடீஸ் கிரேக்கத்தில் பிறந்து வாழ்வியல் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தினான்.
புத்தன் வடக்கில் தோன்றி புத்த மதம் தோன்றிவித்து போதனை செய்தான்.
அந்த காலகட்டத்தில் தொல்காப்பியன் நம் மண்ணில் நடமாடி நம் வாழ்வியல் நாதமான
நம் தமிழ் மொழிக்கு இலக்கியம் வகுத்து இலக்கினம் படைத்தான்.
மேலே கூறிய தத்துவ ஞானிகள் யாவரும் வாழ்வியல் நெறி கூறிய அதே சமயம் நம் தொல்காப்பியன் ஒரு மொழிக்கு இலக்கனம் வகுத்தான் என்றால் தமிழ் மொழி எவ்வளவு பழையது.
எவ்வளவு தொன்மையானது.
தமிழன் எப்போது தோன்றினான்,
தமிழ் நாகரீகம் எப்போது தோன்றியது, தமிழ் மொழி எப்போது பிறந்தது? இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் ஒருவன் எழுதினால் என்றால் எவ்வளவு காலம் முன்னமே தமிழ் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.
தமிழர்கள் நாகரீகத்தில்
எத்துனை பழமை வாய்ந்தவர்களாக, பண்பட்டவர்களாக
இருதிருக்க வேண்டும்.

சல்லடையாக சலித்து,சலித்து
அறிஞர் பெருமக்கள்
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
உலகில் ஆறு மொழியே மிக தொன்மையான மொழி என்று.
அவை கிரேக்கம், லத்தின், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், தமிழ்.

கிரேக்க மொழி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
லித்தினும் எப்போதோ பழக்கத்தில் இல்லாமல் போக , ஹீப்ரூவில் தான் முதன் முதலில் விவிலியம் எழுதினார்கள். இப்போது அந்த மொழியை புதுபித்து கொண்டு இருக்கிறார்கள்.
சீனம் வட வடிவம் எழுத்துக்களால் ஆனதால் அது கற்பதற்கு மிகவும் கடினம், சமஸ்கிருதம் எழுத்து மொழியே தவிர பேச்சு மொழியாக எங்கும் காணபடவில்லை.
இதில் இலக்கியம் இருக்கலாம்.
தொன்மை இருக்கலாம்.
ஆனால்
தமிழ் மொழி மட்டுமே
இன்றளவும் பேச்சு மொழியாகவும்,
எழுத்து வடிவமாகவும்,
பாமரன் முதல் படித்தவன் வரை, காலம்காலமாக கொஞ்சமும்
இளமை மாறாமல் உலகம் முழுவதும் கிட்டதட்ட பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசபடுகிறது.
இன்றளவும் கொண்டாடபடுகிறது.

இவ்வுலம் எப்படி தோன்றியது.
ஆண்டவன் இவ்வுலகை படைத்தான்.
ஆண்டவன் படைத்தான் என்றால் அவன் முதன் முதலில் எதை படைத்தான். எவ்வாறு படைத்தான்.
இப்படி பல கேள்விகள் எழுத்தான் செய்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்.
சூரிய குழம்பில் இருந்து ஒரு சிறிய பகுதி கிழ் நோக்கி விழ ,
அதன் மேல் பல லட்சம் ஆண்டுகள் மழை பொழிய,
விழுந்த குழம்பு குளிர்ந்து
பாறையாக மாறி
அந்த பாறை வெள்ளத்தில் அடித்து செல்ல, பின் சிறு, சிறு கற்களாக உடைய,
அதுவே பின்
கரைந்து மண்ணாக மாறியது.
அதுவே பூமியாக மாறுகிறது.
அப்போது, தமிழ் எப்போது தோன்றியது.
புரிகிறதா!
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி மட்டும் அல்ல மூத்த மொழியும் தமிழ் தான். ஆதி மொழி தமிழ்.
தமிழ் வாழ்க, தமிழ் வளர்க.
- பாலு.

எழுதியவர் : பாலு (3-Nov-19, 3:22 pm)
சேர்த்தது : balu
பார்வை : 3634

மேலே