என் புன்னகை பூவே 555

என்னவளே...


இரவினில் மலரும்

பூக்களும் உண்டு...


பகலில் மலரும்

மலர்களும் உண்டு...


நீ மட்டும் எப்படி

எப்போதும் மலர்கிறாய்...


மலரே உன்

பெயர்தான் என்னவோ...


மலரும் உன்

புன்னகையை கண்டாலே...


பல மலரின்

மனம் தென்றலில்...


நித்திரையில்

என் சுவாசமும்...


உன் புன்னகையின்

வாசம் தானடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Nov-19, 3:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1224

மேலே