காதல்
என் மனதை உன்னிடம் கொடுத்துவிட்டேன் நான்
இனி எனக்கென்று எது தனி மனம் அது
உன் மனதோடு மனதாய் ஒன்றியது ஒரு மனதாய்
உன் காதலி நான் கூறுவதை இன்னும் கேட்கவில்லையா
அத்தான், அத்தான்..... என்று அவள் கூறி அழைக்க
அந்த வார்த்தை ...'அத்தான்' என் காதில் இன்பத்தேனாய்
வந்து பாய்ந்தது ...... அந்த இசைத்தமிழ் வாதையில்
அந்த இசையாய் வந்த அழைப்பில் என்னையே
மறந்த நான் ....... விழித்துக்கொண்டேன்
நல்ல நேரம் நான் விழித்துக்கொண்டேன் இல்லையெனில்
இது கூட உன் காதில் விழவில்லையா என்று
கோபித்து அவள் என்னை விட்டு தள்ளிப்போனால்....
இப்போது நான் கூறினேன் ...' கண்ணே, அத்தான்
என்ற இன்மொழியில் நீ என்னைக் கூறி அழைக்க
அதைக்கேட்டு பித்தானதடி என் மனது... அந்த மயக்கத்தில்
உன் உருவையும் மறந்தேனடி ஒரு வினாடி....
மன்னிப்பாயா என் கண்மணியே ....... என்றேன்
இதைக்கேட்டு நெகிழ்ந்த அவளும் விரைவில் வந்து
என்னை அணைத்தாள் ...... மீண்டும் என்னை
மறந்தேன் நான் பித்தாய்.....
ஐயா , காதல் வியாதி பொல்லாதது
இப்படித்தான் அது ஏதேதோ செய்யத் தோன்றும்
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தான்
அவ்வழியே வந்த
ஒரு சித்தனும் இப்போது !