பாழும் கிணத்துல விழாத
விழாத விழாத பாழும் கிணத்துல தான் விழாத!
விழாத விழாத பாழும் கிணத்துல தான் விழாத!
அழகுலதான் தளதளக்கும் மேனி!
அது அன்பில்லா கேணி!
விழாத விழாத பாழும் கிணத்துல தான் விழாத!
பளபளக்கும் பவுடர் தடவிய மூஞ்சு!
கழுவிட்டால் பார்க்கச் சகிக்காத கண்றாவியா ஆச்சு!
விழாத விழாத பாழும் கிணத்துல தான் விழாத!
முத்தம் என்று கேட்பா!
உன்ன மொத்தமா தான் கவிழ்ப்பா!
நீயும் மதி கெட்டுப் போய் தெருவிலதான் நிப்ப!
விழாத விழாத அந்த பாழும் கிணத்துல தான் விழாத!
காதல் என்ற சொல் அது காமத்திற்காக பயன்படலாச்சு!
மூனு நாள் பார்க்கலனா வேறு ஆள் மாறிப் போச்சு!
கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல்வாதியை போல இந்த காதலும் சோடி விட்டு சோடி தாவும் மிகபெரிய அரசியலாச்சு!
விழாத விழாத பாழும் கிணத்துலதான் விழாத!
அழாத அழாத பாழும் கிணத்துல விழந்து ஆறாத காயத்தோடு அழாத!
வருந்தாத வருந்தாத அந்த அழகிதான் உன் காதலி ஆகவில்லையேனு வருந்தாத!
விழாத விழாத பாழும் கிணத்துல தான் விழாத!
விழாத விழாத இந்த தண்ணீர் இல்லாத பாழும் கிணத்துல தான் விழாத!
பணத்தை பார்க்கும் அன்பில்லாத மனத்தைதான் விரும்பாத!
உடையைப் பார்க்கும் நல்ல உணர்வில்லாத உள்ளத்தைத் தான் நேசிக்காத!