நானும் ஓர் காதலனோ

நானும் ஓர் காதலனோ!

யாரும் சொல்லாததைத் தான்
சொல்லிட
நினைக்கிறேன் இவள் பற்றி
எவரும் கூறாத புது வார்த்தைகளை யெல்லாம் கூறிட
தேடுகிறேன் ஆகாய மேனியிலே
எவரும் தாலாட்டி,சீராட்டி,கொஞ்சிராத புத்தம் புது கோணத்திலே
கொஞ்சிடத்தான் முயலுகிறேன்
எவரும் சேர்க்காத புது தேசத்தில் இவள் அழகைச்
சேர்த்திடத் தான் பறக்கிறேன் மூவேலுலகில்
எவரும் எக்காலத்திலும் மயங்கி இவளிடம் வீழ்ந்திட
புனைகிறேன் இளம் பேரழகியாய்

எவரும் கொட்டிறாத ஆசைகளை யெல்லாம்
இவளிடம் கொட்டிவிடத் தான் துடிக்கிறேன்
எவரும் தீர்க்காத இவள் தாகத்தை
தீர்த்திடலாமென
தவிக்கிறேன் ஆழியிலே
இத்தனை நினைப்பு, முனைப்பு, தேடிப்பு, கொஞ்சிப்பு, பறப்பு, கொட்டிப்பு, துடிப்பு, தவிப்பு என அத்தனையையும்
இந்த தமிழ் மகளிடம் காதலை சொல்லி சென்றனர்
இவள் முன்னால் காதலர்களான கம்பன், வள்ளுவன், பாரதி...
எப்படித்தான் இவளை காதலித்தாலும் இவர்களின் சாயலாகத் தான் நான் இருப்பேன்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (5-Nov-19, 9:38 pm)
பார்வை : 75

மேலே