94 அவன் - 05

94 அவன் அவள் காதல் 05
==========================
#அவன்_05
===========
கில்லி தண்டால் ஆடச்சென்றிருந்தேன்
அங்கே யாருனை வரச் சொன்னது?
ஜெயித்துக் கொண்டிருந்தவன் தான்..
தோற்க ஆரம்பித்து விட்டேன் உன்னிடம்..
அதெப்படி பார்க்காத மாதிரியே பார்ப்பது?
எனக்கும் அந்தக்கலையை கற்றுக்கொடேன்..
வீட்டில் இப்போதெல்லாம் வேலை ஒன்று சொல்ல
தவறு தவறாகவே செய்து திட்டு வாங்குகிறேன்..
மனதிற்குள் மன்னனைப்போல சிரித்துக்கொண்டே..
எப்படி இருந்த நான்
இப்படி ஆகி விட்டேன்..
ம்கூம்.. நீதான் ஆக்கிவிட்டாய்..!!
அ_வேளாங்கண்ணி