சொல்தவறும் நீசனே நீசன் - நீதி வெண்பா 24

நேரிசை வெண்பா

நீசனோ நீசன் நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன் அவனையே - நீசப்
புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல். 24 நீதி வெண்பா

பொருளுரை:

யோசிக்கும் பொழுது, சாதிப் புலையனோ புலையன்?

சொன்னசொல் தவறுகின்ற புலையனே புலையன்,

சொல் தவறுபவனை விட்டு மற்றவரை இழிவினையுடைய புலையனாகும் என்று சொல்லுகின்ற கீழ்மகனே பெரும்புலையனாவானென்று நீ சொல்வாயாக என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்..

கருத்து:

சொன்ன சொல் தவறுவோன் தாழ்ந்தவனாக மதிக்கப்படுவான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-19, 4:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே