94 அவள் - 06

#அவள்_06
===========

நானெப்படி தானாகச் சிரிக்கிறேன்
அடிக்கடி கேட்கிறாள் என் தங்கச்சி
சொல்லிவிடவா நானிப்போ உன் கட்சியென
ஆடு புலியாட்டம் ஆட என்னை வற்புறுத்துகிறாள்
ஓர் ஆண்புலியிடம் விரும்பி மாட்டிய இந்த ஆட்டைப் பற்றி அறியாமல்..
இப்போது நீயே காதலைச் சொல்லப் போகிறாயா?
இல்லை நானே வகுப்பில் வைத்து சொல்லட்டுமா?
வகுப்புத்தலைவியாய் ஆனதில் இருந்து
உனை கொட்டும் நாளுக்காய் காத்திருக்கிறேன்..
நீயோ இப்போது நல்லபிள்ளையாய் மாறி
படிக்கவெல்லாம் ஆரம்பித்து விட்டாய் 
என்னை காதலில் துடிக்க வைத்துவிட்டு

#அ_வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (8-Nov-19, 11:27 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 2405

மேலே