உனக்காக வாழ நினைக்கிறேன் பாடல் வரிகள் மாற்றி எழுதியது

(பெண்)
உணர்வோடு கலக்க நினைக்கிறேன்..
உயிர் காதல் தரித்து தழைக்கிறேன்...

இதயம் இசைக்கையில்
நீ தான் இமைக்கிறே....
ஒரு நொடியும் நெளிய
விடவே மாட்டேன்
மூச்சில் மேய்திடுவன்...

(ஆண்)
புலன் எல்லாம் நீதானோ...
நிசமாக நிறைவேனோ...
உன்னில் மிதக்கும் வரை தான்
என் வாழ்க்கையே...
உளறி,உளறி கிடப்பேன்
உந்தன் மடியிலே...
உன்னில் நனைவது சுகமா...
இன்னும் பிறப்பு ஒன்று வருமா..
படராதே எந்தன் வானின் ஓரமா...

(பெண்)
மாலை பொழுதிலே
நாம மாட்டிகணும்..
காதல் தடியாலே
நாம ஊன்றிகணும்..
உந்தன் மீசை என்ன
மெல்ல முட்டிக்கணும்...
உன்ன எந்தன்
உலகாக பாத்துகணும்....

உயிர் நிறை நீ வரை
இனி ஒரு புது புவி
சுழன்று சுழன்று
வாழ்ந்து காட்டணும்...

உணர்வோடு கலக்க நினைக்கிறேன்...
உயிர் காதல் தரித்து தளைக்கிறேன்...

🍃இஷான்🍃

எழுதியவர் : இஷான் (9-Nov-19, 1:55 pm)
பார்வை : 536

மேலே