அவன் அவளிடம்
துன்பமாம் கோடை வெய்யல்
உன்னைத்தாக்கினால் நான்
குடையாய் வந்து உன்னைக்காப்பேனடி
என்றும் உனக்கு அன்பு மட்டுமே தரும்
கொடையாளியாய் இருப்பேனடி
வாழ்வு உள்ள வரை . இது வெறும்
வார்த்தை ஜாலமென்று ஒரு போதும்
எண்ணிவிடாதே , ப்ரியே , இது
என் இதயம் சொல்லும் வார்த்தைகள்
என் இதயத்தில் இருந்து பேசும்
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
பேசும் வார்த்தைகள் .....