அவள்

அன்றலர்ந்த மல்லிகைப்பூ கார்க்குழலை அலங்கரிக்க
அழகியவள் மெல்ல மெல்ல
அன்னமாய் நடந்து போக
கருவண்டு ஒன்று அவள்
கூந்தலின் மல்லிப்பூவையே
விடாது துரத்தி மொய்க்கின்றது
மலரின் தேன் உண்ண........
அவள் அறியாள் பாவம் ....
அவள் அறியாள், அவள் பின்னே
அவள் பார்வையில் படாது
நிழல் போல் அவளைத் துரத்தும் அவன்
பாவம் மல்லிகைப்பூ.... செடியிலும்
வந்து மொய்க்கும் வண்டு... அவள் தலையில்
இருந்திடலாம் என்று நினைக்க
அங்கும் வந்து தொந்தரவு செய்யும் வண்டு..
இவளும், இந்த பூவையும் பாவம் பூப்போல
அலுவகத்தில் பணியில் இருந்தாலும்
தொல்லைதருவார் உண்டு....
தெருவில் தனியாக நடந்து சென்றாலும்
துரத்தும் கூட்டம்.....
பெண்ணே உன் அழகே உனக்கு சாபமோ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Nov-19, 3:13 pm)
Tanglish : aval
பார்வை : 92

மேலே