காதல்

பார்க்கதான் ஆசை
அழகிய மலருன்னை

கேட்கத்தான் ஆசை
உன் குரல்தன்னை

பருகதான் ஆசை
பூவிதழ்தேனை

தலைசாயதான் ஆசை
மடிதன்னில்

கைகோர்திடதான் ஆசை
நடனமாடிட

நிறைவேறுமா ஆசை
தெரியாதாகினும்

பட்டியலிடும் ஆசை
மட்டும் நீள்கிறதே

எழுதியவர் : நா.சேகர் (13-Nov-19, 12:32 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 144

மேலே