காதல் சொல்ல வந்தேன் -16

காதல் சொல்ல வந்தேன்-16

இப்பொழுதெல்லாம் அடிக்கடி கோபப்படுகிறேன் காரணமின்றி

எதிர்பார்ப்புகள் அதிகமானதால்

சுயநலமாக யோசிக்கின்றேன்
அதுவுன்னை காயப்படுத்திவிடுகிறது

காரணம் புரியாது கலங்குகிறாய்

உன்கண்களில் கண்ணீர்துளிகள் கண்டதும் நான்

கலங்கிப்போகின்றேன் என் கலக்கம் கண்டு

எளிதாக சமாதானம் ஆகிவிடுகிறாய்

உன்னால் மட்டும் முடிகிறது

நானும் என்னை மாற்றிக்கொள்ளவே முயற்சிக்கின்றேன்

முடியவில்லை காரணம் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (13-Nov-19, 12:35 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 110

மேலே