ஏனடி செய்தாய்

சிலையாய் செதுக்கி நெஞ்சில்
சிற்பம் போல வைத்தேனே
மலையாய் அன்பைத் தருவாயென
மனதால் உன்னை நினைத்தேனே
பல்லால் வதைத்த புலியாக
சொல்லால் குதறிச் சென்றாயே
அலைகள் கலைத்த சுவடாக
அழிந்து போனதடி என்னுள்ளம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (20-Nov-19, 12:42 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : aenadi seythaay
பார்வை : 197

மேலே