காதல் பாலம்
கடல் மீது பாலம்
கடலை கடக்க
நதி மீது பாலம்
நதியைக் கடக்க
இரு உள்ளங்கள்
இணைய அமைவது
காதல் பாலம் -இது
ஒரு அரிதில் உடையா
உறுதியான பாலம்
சந்தேகம் என்ற சூறாவளி
வந்து தாக்கா வரை