எங்கு நான் முத்தமிட

மென்மையாக உன் தலைகோதி
நெற்றியில் ஓர் முத்தமிடவா?
இல்லை
கண் இமைகளை கட்டி விட்டு
கருவிழிகளுக்கு தெரியாமல்
கண்ணோரம் ஓர் முத்தமிடவா ?

முனைப்பான உன் மூக்கின் மேல் நீ
அறிந்தபடி ஓர் முத்தமிடவா ?
இல்லை
என் சுவாசம் கலக்கும் நொடியில்
நீ அறியாதபடி முத்தமிடவா ?

இதழ்கள் இளைப்பாறவிடாமல்
இடைவெளியின்றி முத்தத்தால் சண்டையிடவா ?
இல்லை
உன் தாடை குழியில் நான் தடுமாறி
நீ தடுமாறும் அளவுக்கு
எண்ணிலடங்கா முத்தங்களை பதித்திடவா ?

மெல்லிய உன் காதுகள் இசை கேட்கும் நேரத்தில்
என் முத்தத்தின் இசையும் சேர்த்திடவா?
இல்லை
வளைந்த உன் கழுத்தின் ஓரத்தில் இருக்கும்
மச்சத்தின் மேல் ஓர் முத்தமிடவா ?

என் கள்வனே எங்கு நான் முத்தமிட ?
உன்னை பார்த்ததும் மறந்துவிடுகிறேன்
என் முத்தத்தின் ஆசைகளை :)
உன் கண்கள் அறியா நேரத்தில்
என் கண்கள் உன்னை பார்த்தபடியே இருக்கிறது ...!

எழுதியவர் : Deepika sukkiriappan (22-Nov-19, 10:32 am)
பார்வை : 401

மேலே