மகா பாரதப்போரின் சேனைக் குறிப்புகள்

மகா பாரதப்போரின் சேனைக் குறிப்புகள்

பாரதப் போரில் பான்டவர் அணியில் 9 (ஒன்பது) அக்ரோணி சேனைகளும்
கௌரவர் அணியில் 20 (இருபது ) அக்ரோணி சேனைகளும் இருந்ததென்று
சொல்லுவார்கள். அதன் விவர ங் களைக் கேட்டால் பிரம்மித்துப்
போவீர்கள். காரணம் வடக்கே இமயம் முதல் தெற்கே குமரி மூவே ந்தரும்
வட மேற்கில் ஆப்கானிஸ்தான் (சகுனியின் காந்தாரம்) வட கிழக்கே பர்மா
( கடாரம்) தாய்லாந்து , மணிப்பூர், மீசோராம் ஆ.கிய ஐம்பத்தாறு தேசங்களும்
பாரதப்பபோரில் கலந்து கொண்டு அவரவர்கள் சேனைகளுடன் ஏதோ
ஒருவருக்காக போர் புரிந்தனர். நமது சோழர் படைகள் பாண்டவர்கள் படை
களுக்கு உணவுத்தேவையைத் தீர்த்து வைத்ததாம் .

அ ந்தகாலத்தில் படை என்பது நான்கு வகைப்படும் என்று கேள்விப்பட்டுள்ளோம்.
அவை ரத, கஜ, துரக பதாதி என்பவையே. .இவைகளின் உட்பிரிவு கீழ் வருமாறு
ஒரு பதாதிபதி என்றால் அவரிடம் 5 காலா.ட்கள் 3 குதிரை வீரர்கள் 1 ரத அதிபதி, 1 யானை யின்
அதிபதி இருப்பார்கள் ( பதாதித் தலைவர்)

சேனாமுகத்தின் தலைவர் மூன்று பதாதிப் படைகளின் தலைவர். அவ ர் பொறுப்பில்
15 காலாட்கள், 9 குதிரை வீரர்கள், மூன்று ரதங்கள், மூன்று யானை வீரர்கள்
இருப்பார்கள்

குமுதம் பிரிவுத் தலைவர் மூன்று சேனாமுகங்களுக்கு அதிபதி .அவரிடம் 45 காலாள்
சிப்பாய்கள், 27 குதிரை வீரர்கள், 9 ரதம் 9 யானை வீரர்களும் இருப்பார்கள்

கணகம் பிரிவின் தலைவர் மூன்று குமுதங்களுக்கு அதிபதி. இவரிடம் 135 காலாட் படையும்
81 குதிரை வீரர்க ளும் 27 ரத வீரர் 27 யானை வீரர்களும் இருப்பார்கள்.

வாகினிப்பிரிவுத் தலைவர் மூன்று கணகங்களைக் கொண்டவர். இவரிடம் 405 பேர்கள்
காலாள் வீரர்களும், 243 குதிரை வீரர்களும், 81 ரதஙளும் 81 யானை வீரர்களும்
இருப்பர்.

பிரளயம் எனும் பிரிவுத் தலைவர் மூன்று வாகினிகளுக்கு அதிபதி அவரிடம் 1315 காலாள் வீரர்களும், 729
குதிரை வீரர்களும் 243 ரதங்களும், 243 யானை வீரர்களும் இருப்பார்கள்

சமுத்திரப் பிரிவின் தலைவரிடம் மூன்று பிரளயங்களுக்கு அதிபதியாவார்.
இவரிடம் 3935 காலாள் வீரர்களும், 2187 குதிரை வீரர்களும் 729 ரத வீரர்களும் 729
யானை வீரர்களும் பணி புரிவார்கள்.

சங்கம் படைத் தலைவரிடம் மூன்று சமுத்திரப் பிரிவுகள் அட ங்குவர் இதில் 11805
காலாள் வீரர்களும் 6561 குதிரை வீரர்களும் 2187 ரத வீரர்களும் 2187 யானை வீரர்களும்
பணிபுரிவார்கள் .

அந்தம் எனும் பிரிவின் படைத்தலைவரிடம் மூன்று சங்கப் பிரிவுகள் சேர் ந்த 35415 காலாட்
படை வீரர்களும் 19683 குதிரை வீரர்களும் 6561 ரதங்களும் 6561 யானைகளும்
அடங்கும்.

ஒரு அக்ரோணித் தலைவரிடம் மூன்று அந்தங் களின் கூட்டுத் தொகையாகிய
106245 கொண்டக் காலாட் படையும் 59049 வீரர்கள் கொண்ட குதிரைப் படையும்
19683 ரதங்ளும் 19683 யானையுடன் கொண்ட படையும் அவர் சொற்படி இயங்கும் .

துரியோதனன் படையில் மொத்தம் 20 அக்ரோணிப் படைகள் இரு ந்தனவாம்
அந்த சேனையின் கூட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா ? 2124900 கால் படை வீரர்
களும் , 1180980 குதிரை வீரர்களும், 393660 ரதங்களும், 393660 யானைகளும் இப்போரில்
சண்டைசெய்தனராம்.

பாண்டவர் அணியில் மொத்தம் 9 அக்ரோணி வீரர்கள் கல ந்து கொண்டார்களாம் .
அதன் மொத்தக் கூட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? 956205 காலாள் வீரர்களும் ,
501441 குதிரை வீரர்களும், 177147 ரதங்களும், 177147 யானைகளும் போரிட்டனவாம்.
பாண்டவர் மற்றும் கௌரவர் படைகளின் கூட்டுத் தொகை மொத்தம் எவ்வளவு
தெரியுமா

எழுதியவர் : பழனிராஜன் (24-Nov-19, 7:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே