காதல் சொல்ல வந்தேன்-20

காதல் சொல்ல வந்தேன்-20

எல்லாக் காதலையும் போல்
நம்காதலிலும்

பிரச்சனை வெளியில் இருந்து
இல்லை

நமக்குள்ளேயே சின்ன சின்ன
விசையங்கள் கூட

கோபத்தை கூட்டுகிறது இருவரும்
பேசித்தீர்க்க முயற்சித்ததில்லை

சதாகாலமும் வாத வார்த்தைகளைகொட்டி

நானும் யோசித்தேன் ஏன் இப்படி

இதன்பின்னால் ஒளிந்திருந்தது
ஒரு எதிர்பார்ப்பு

இதுவும் ஒருவகை அன்பு புரிந்தது

அமைதியாக கேட்டுக்கொள்ள முடிவெடுத்து

நீ சொன்னதை கேட்க உன்

எதிர்பார்ப்பு நிறைவேறியது

புரிந்துக் கொண்டேன் உன்னை

மாற்றிக் கொண்டேன் என்னை

ஏன் என்றால் எனக்கு உன்னை
ரொம்ப பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (26-Nov-19, 4:06 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 69

மேலே