அன்பு

வெண்ணிலவை தொட்டு
விண்மீன்கள் இருப்பிடம்
கேட்டேன்...
எட்டாத தூரத்தில்
கெட்டியாய் மின்னியபடி;
பிரபஞ்சம் இன்னும்
பிரமித்துக்கொண்டே இருக்கட்டும்
உயரத்தில் இருந்தால்
உன்னதமா யிருப்பே னென்கிறது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (26-Nov-19, 11:08 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : anbu
பார்வை : 3188

மேலே