கன்னக் குழிவினில் சற்று இளைப்பாறி

தேடி வந்த தென்றல்
தீந் தமிழ்ப் பாடல்
பாடி வரும்
சாளரத்தின் வழி நுழைந்து
பாடிடும் அவள் கருங் கூந்தலுடன் ஆடி
கன்னக் குழிவினில் சற்று இளைப்பாறி
செவ்விதழில் இசைக்கு நன்றி முத்தம் கொடுத்து
சாளரத்தில் சற்று தயங்கி நின்று விடை பெற்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Nov-19, 10:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 333

மேலே