காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன்

அன்றைய நாள் தான் என் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் முகத்தை கண்டு மெய் மறந்து நின்றேன்.

எனக்குள் ஒரு எண்ணம் ஒரு வேலை நமக்குள்ளும் காதல் வந்து விட்டதோ என்று !

காதல் என்பது வார்த்தை அல்ல அது வாழ்க்கை. . .
போராடாமல் வாழ்க்கையும் இல்லை , போராடாமல் வென்ற காதலும் இல்லை.

காதல் செய்வது என்பது உயரமான மலை உச்சியில் இருந்து விழுவதற்கு சமம் என்று என் மூளை ஒரு பக்கம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க . . .

விழுந்து பார் உன்னால் பறக்க முடியும் என்று ஆசையை தூண்டியது என் இதயம். . .!

இதயத்தின் ஓசையை இனிதாய் ஏற்று கொண்டு வானத்தில் பறந்தேன் சிறகில்லாமல். . . நான் காதலில் விழுவதையும் அறியாமல் . . . !

எழுதியவர் : முஹம்மது உதுமான் (27-Nov-19, 12:05 am)
சேர்த்தது : முஹம்மது உதுமான்
பார்வை : 777

மேலே