இப்ப நான் பச்சன்டா - குறுங்கதை

டேய் பச்சையப்பா, எப்படா வடக்கிருந்து வந்த? நல்லா இருக்கிறயா? வடக்க போனவன் ஆளே மாறிப்போயிட்டிடா?
@@@@@
டேய் மாரிதாசு, அப்பா நான் பச்சையப்பன். இப்ப நான் 'பச்சன்'டா?
@@@@@@
"அப்ப நான்.... " "இப்ப நான்...." என்னடா சொல்லற?
@@@@@
டேய் நான் மத்திய அரசு பணியில இருக்கிறவன். பதவி உயர்வில ஜார்கண்ட்டுக்கு மாத்தறவரைக்கும் நான் பச்சையப்பன். அங்க எங்க எம் பேரச் சொன்னாலும் பாச்சையப்பன்னு சொல்லறாங்க. என்னோட அலுவலக ஊழியர்களும் என்னை ஶ்ரீபாச்சையாப்பன்னு சொல்லறாங்க. எனக்கு ரொம்ப வெக்கமாப் போச்சுடா மாரிதாசு.
@@#@@@
சரி அப்பறம் என்ன ஆச்சு. எனக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பேரு ஞாபகத்துக்கு வந்துச்சு. உடனே ஒரு வழக்குரைஞரைப் பாத்து முறைப்படி எம் பேரை 'பச்சன்'னு மாத்தி அரசி இதழிலில் (Gazette) வெளியிட்டேன். என்னை இனிமே யாரும் எங்க தாத்தா நினைவா எனக்கு வச்ச 'பச்சையப்பன்'ங்கிற பேரைச் சொல்லிக்கூப்பிடக் கூடாதுடா மாரிதாசு.
@@@@@#
சரிடா பச்சன்
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Bachcha = child
Bachchan = childlike
(Colloquial names)

எழுதியவர் : மலர் (28-Nov-19, 7:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 120

மேலே