இணைந்திடுங்கள் நதிகளே

வித்திடும் மக்களின்
தாகமும் தீரவில்லை
விவசாயம் தழைத்து
விளைந்திட வழியுமில்லை
பரிதவிக்கும் மக்களின்
பரிதாப நிலையிங்கு
பதவியில் நிலைத்திட
பத்தும் நடக்குதிங்கு
பொழியும் மழையும்
பொய்த்துப் போனது
வழியும் விழிநீரே
வாய்க்கால் ஆனது
இணைந்திடுங்கள் நதிகளே
தானாக முன்வந்து
கடலும் மாறிடுக
அருந்திடும் குடிநீராக
அல்லலின்றி வாழட்டும்
அடுத்த தலைமுறையேனும் !
பழனி குமார்
27.11.2019
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
