அனல் மழை
என்ன அற்புதம் செய்தாய் கதிரே
இங்கிருக்கும் எவ்வகை நீரையும்
வளமாய் வடிக்கட்டி சேகரித்து
அந்நீரில் உயிர்க்கான சத்தை சேர்த்து
மேகக்கூட்டமாய் மாற்றி கருப்பாக்கி
பூமியின் சுழற்சிக்குப் ஒப்ப சுழன்று
பல கண்டகளைக் கண்டுற்று
பொழிந்து தாகந்தீர்த்து வளமாக்கி
அருவியாய் நதியாய் ஆறாய் ஓடையாய் ஓடி
ஓரிடத்தில் குவிந்து ஏரியாய் குளமாய் குட்டையாய்
உருவாகக் காரணமான நீர்க்காரகனே
கனல் வீசி உயிர்க் காக்கும் அனலனே
போற்றி வணங்கி உம்மை வணங்குகிறோம்.
---- நன்னாடன்