நினைவில் நின்றவள்♥️♥️

நினைவில் நின்றவள்♥️♥️

என் நினைவில் நீங்கா இடம்பெற்ற என்னவளே
என்னை விட்டு பிரிய எப்படியடி மனம் வந்தது
என் உயிரே நீ இல்லாத
இந்த உலகம்
எனக்கு வெறுமையே
இளவரசியே நீ இல்லாத
நம் அரண்மனை
எனக்கு சிறைசாலையே
தேவதையே உன்னை காணாத
இந்த கண்கள் விரைவில்
பார்வையற்று போகுமோ

அழகிய ஓவியமே
எங்கு சென்றாயோ
வண்ண மலரே
வெகு தூர பயணமோ
இதய ராணியே
என் இதயத்தை ரணமாக்கி விட்டு
நீ காற்றில் கரைந்து விட்டாயா
என் காதல் மனைவியே
காலன் அழைத்தால் பயந்து சென்று விட்டாயோ
உன் மீது எனக்கு கோபம்
என்னை அழைத்துயிருந்தால் அந்த படுபாவியை விரட்டி அடித்து அனுப்பியிருப்பேன்
ஏன் என்னை அழைக்கவில்லை
சொல்லடி என் கண்ணே
சொல்லடி என் கண்மனியே
பதில் சொல்லடி..... பதில் சொல்லடி.....

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Dec-19, 8:42 pm)
சேர்த்தது : balu
பார்வை : 92

மேலே