புதுக்குளம் எஸ்பிபட்டினம்
பள்ளியின் பக்கத்திலே பசுமை போர்வைகள்
நூல் இல்லாமல் நெய்து போத்தியது யாரோ
எப்படி வந்தது
எங்கிருந்து வந்தது
பொடிநடையாய் வந்ததோ
பொழுது போக்காய் வந்ததோ
தவழ்ந்து விழுந்து வந்ததோ
தத்தளித்து தள்ளாடி வந்ததோ
பாசம் வைத்து வந்ததோ
நேசம் வைத்து வந்ததோ
மீன்களின் ஏக்கம் தீர்க்க வந்ததோ
மீளாத வறட்சியை புரட்டிப்போட வந்ததோ
காய்ந்து போன படி சரக்கங்களின் தாகங்கள்
இன்றோடு தீர்ந்தது
ஒதுங்கி படுத்த குளம்
ததும்பி விழித்திருக்கு
பதுங்கி இருந்த மரம்
மகிழ்ச்சியில் புகைப்படம் கேட்டுருக்கு
நிறைமாத கர்பிணியாய் அங்கும் இங்கும்
அலம்பி தள்ளாடும் அழகே தனிதான்
சுற்றுலா வந்த பறவைகள் எல்லாம்
நீள விடுமுறையோடு நீச்சல் அடிக்கிறது
மகிழ்ச்சியில் நானும் விடுமுறை
எடுத்து வருகிறேன்
உன்னோடு புகைப்படம் எடுக்க...
நிறைந்தே இரு
நித்தம் பேசலாம்
சத்தம் இல்லாமல் நீயும் நானும்
புதுக்குளம் இன்று புதுமைக்குளம்
BY ABCK