காதல் தோல்வி 😭
காதல் தோல்வி💘 😭
உன்னிடம் ஏன் இந்த மாற்றம்.
எனக்கு மிக பெரிய ஏமாற்றம்.
ஒரு வார்த்தையில் கூறிவிட்டாய்.
பிரிந்துவிடுவோம் என்று.
இதற்காகவே பல வருடம் காதலித்தோம்.
எப்படியடி நீ அப்படி கூறுனாய்.
சொல்லடி, பதில் சொல்லடி.
பூவான என் இதயத்தில் பூகம்பமடி.
மென்மையான என் மனம் வெடித்து சிதறியதடி.
என் கால் சென்ற திசையில்
நடை பிணமாக நான்.
நம் பல வருட காதல்
முறிவதற்கு யார் காரணம்.
செழிப்பான நம் காதல் கற்பனை கோட்டை தரைமட்டம் ஆனதிற்கு யார் காரணம்.
நீ என்னை வேண்டாம்
என்ற கூறிய வார்த்தை
உன் உதட்டில் இருந்து வந்த வார்த்தையா?
உன் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தையா?
காதல் தோல்வியின்
காரணத்தை தேடுகிறேன்.
விடை இதுவரை கிடைக்கவில்லை.
பதில் கூற முடியாத கேள்வியா?
சிதம்பர ரகசியமோ?
பைத்தியகாரன் - நான் தான்.
கேள்வி- நான்
பதில்- உன் நிலை.
சரியா?
புரிந்து கொண்டேன் பெண்னே !
தெரிந்து கொண்டேன் பெண்னே!
எல்லோரும் போல் நீயும் சூழ்நிலை கைதியாகிவிட்டாய்.
சரி, நன்றாக இரு.
உன்னை எளிதில் மறக்க முடியாது.
முயற்சிக்கிறேன்.
மனமே
என் மனமே
உன்னை பலவாறாக காயபடுத்திய என்னை மண்ணித்து விடு
எண்ணங்களின் குவியலே
பாலைவனமாக மாறிய
என் வாழ்க்கையின் எதிர்கால மாற்று சக்தியே!
என்னை சாந்த படுத்த ஒரு யோசனை கூறு.
- பாலு.