அன்பனே என் அலைபேசிக்கு

அழுத்திக் கத்தியால் கிழித்ததைப் போல்
அடி இதயத்தில் உயிர் போக்கும் வலி
அன்பனே என் அலைபேசிக்கு பதில் இல்லையே
அனைத்தையும் இழந்ததைப் போல் தோணுதடா

அயற்சியாலே வாடுதாடா அழகு உடல்
நொடி தோறும் நொய் நொய்யன தகவல் தருவாயே
பார்க்காவிட்டால் பட்டாசாய் கோபத்தில் வெடிப்பாயே
பட்டென்று மறந்து பரிதவிப்பாயே அன்பனே

சமிக்ஞை கிடைக்கா கைப்பேசியாய் உள்ளேனடா
சட்டென வந்து என் துயர் களைத்து மகிழ்வூட்டுடா
உடை உடுத்தும் போது உள்ளாடை மறந்தும்
உறவினரைப்பார்க்கும் உறவுமுறை மறந்தும் போறேன்

ஒவ்வொரு நொடியும் ஊசி மேல் நடப்பதாய் உள்ளது
ஒவ்வொரு உருவமும் உன்னைப்போல் தோணுதடா
உரிய நேரத்திற்குள் வந்துவிடடா செல்ல நாயாய்
உயிர் போய்விட்டால் தொல்லைத் தருவேன் பேயாய்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Dec-19, 7:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 101

மேலே