உன் விழிப்பு பார்வை

வெட்கத்தில் மருளும் போது
உன் விழி மான்விழி
இன்பத்தில் துள்ளும் கயல்விழி
நேருக்கு நேர் என்னை பார்க்கையில்
மன்மதனின் அம்பு விழி
என் அத்துமீறலைக் கண்டிக்கையில்
அதில் கோபக்கனல் .... கனல் விழி
சோர்ந்துவிட்டால் எனக்கு
அன்பு மழையால் நனைக்கும் அன்பு விழி
துயர் வந்திடில் என்னைக் காக்க
இமைகள் மூடாது காத்து நிற்கும்
தாயின் பாச விழி - இன்னும் என்ன
கண்ணின் மகோன்னதமே உந்தன் விழி

உன் பார்வைக்கு என்றும்
அடிமை உன் காதலன் என் விழி

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (5-Dec-19, 7:41 pm)
Tanglish : un vilippu parvai
பார்வை : 232

மேலே