உடல் கருகும் வரையில் காதல்

நீ செல்லும் இடந்தோறும் காதல் கொண்டு
உன் வாசமாய் பார்க்க வந்தேனடி
நீ பார்க்கும் இடந்நோக்கி எந்நாளும்
கருங்கல் சிலையாய் நான் நின்றேனடி

நிலத்தில் சேர்ந்த நீராக
உன் நினைப்பை சுமந்து வந்தேனடி
நெருப்பு பார்வை பார்த்து நீயும்
பெரும் அச்சத்தை எனக்கு தந்தாயே

அறுக்க அறுக்க துளிர்க்கின்ற
அருகம் புல்லாய் இருந்தேனே
அடித்து என்னை விரட்டி விட
பருத்த குண்டர்களை அனுப்பினாயே

நனைந்த கரித்துண்டு நெருப்பினிலே
விழுந்ததைப் போல் எழுந்து வந்தேன்
மிரட்டி என்னை அஞ்ச வைக்க
காவல் நிலையத்தில் புகார் அளித்தாயே

கழண்டு விடுவேன் என்றெண்ணி
கலகங்கள் பலவற்றை நீ செய்தாலும்
கருவாய் நெஞ்சில் முளைத்து விட்டாய்
உடல் கருகும் வரையில் காதல் மறையாது.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Dec-19, 7:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 103

மேலே