கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் – நன்னெறி 35

நேரிசை வெண்பா

கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம். 35 - நன்னெறி

பொருள்:

வெற்றிதரும் நீண்ட வேல், என்னைப் பழிக்காதே என்று வேண்டிக் கொள்ளும் விழியாளே!

வாழைப்பழம் பாலை வேண்டும், புளியம்பழம் பாலை விரும்புவதில்லை.

அதுபோல மேன்மக்களே கற்றோரை விரும்புவர், மற்றவர் மதிப்பதில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-19, 10:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே