கலியுகத்தில் வீடுதொறும் கூற்றுவனாமே - நீதி வெண்பா 32

நேரிசை வெண்பா

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேதத்திற் சானகியே - பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதொறும் கூற்றுவனா மே. 32

- நீதி வெண்பா

பொருளுரை:

கிரேத யுகத்தில் இரேணுகையே எமனாம்;

திரேதா யுகத்தில் தனக்குத் தானே ஒப்பாகிய சீதையே எமனாம்;

அதற்கடுத்த துவாபர யுகத்தில் மிகுந்த அழகுடன் கூடிய திரௌபதியே எமனாம்;

கலி யுகத்தில் வீடுகள் தோறும் எமனாம்.

கருத்து:

கலியுகத்திற் பெண்கள் பெரும்பாலுங் கொடிய குணமுடையவராயிருப்பர் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-19, 6:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே